அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஹிப் ஹாப் ஆதி!.. மீசையை முறுக்கு 2 மாஸ் அப்டேட்!..
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.படத்தில் இடம்பெற்றுள்ள ‘அடி போடி’ என்ற புதிய பாடல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் நேரடி தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
குறிப்பாக இரட்டைக் காலவரிசை அமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரது வாழ்க்கையில் நிகழும் புதிய சவால்கள் மற்றும் அனுபவங்களை மையமாகக் கொண்டுள்ளது.
படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்ததுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் கேத்திகா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, கருணாஸ், நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான ‘ஆரா பத்து பத்து’, ‘பப்பாளி பழமே’ மற்றும் ‘கொந்தம்மா’ ஆகிய பாடல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகவுள்ள ‘அடி போடி’ பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
