×

75 நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன்... விஷ்ணு விஷால் மகிழ்ச்சி பதிவு

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பின்னர் விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்து கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

 

அதையடுத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் நெருங்கி பழகி காதலிப்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக ஜுவாலா கட்டா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இருந்தாலும் விஷ்ணு விஷாலுக்கு தன் மகன் மீது உள்ள பாசம் கொஞ்சமும் குறையவில்லை. அடிக்கடி அவரை சந்தித்து விடுவார்.

ஆனால், கொரோனா லாக்டவுன் என்பதால் தன் மகனை கடந்த 75 நாட்களாக பிரிந்திருந்த நிலையில் தற்போது அவனை சந்தித்து ஒன்றாக சேர்ந்து படம் பார்க்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு " 75 நாட்களுக்கு பிறகு என் மகனை சந்தித்துள்ளேன்" என மிகுந்த மகிழ்ச்சியாக கூறி பதிவிட்டிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News