தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்த நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில், சிரஞ்சீவி சர்ஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பின் மேக்னாவுக்கு மகன் பிறந்தான். தற்போது கணவனின் மறைவிலிருந்து மீண்டு மேக்னா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் பேட்டியளித்தபோது ‘இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய மேக்னா ராஜ் ‘என்னை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறும் பலரும் கூறுகிறார்கள். சிலரோ செய்து கொள்ள வேண்டாம் என சொல்கிறார்கள்.
அந்த விஷயத்தில் நான் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதில், நான் என்ன முடிவெடுத்தாலும் சிரஞ்சீவி என்னுடன் இருப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திருமணத்தை விட என் குழந்தையின் எதிர்காலமே எனக்கு முக்கியம். எனவே, அதைப்பற்றி மட்டுமே யோசித்து வருகிறேன்’ என அவர் கூறினார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…