Categories: Cinema News latest news throwback stories

என்ன பண்ணுனாலும் விஜய்யால் கேப்டன் மாதிரி ஆக முடியாது!.. நிருபரின் கேள்வியால் கடுப்பான மீசை ராஜேந்திரன்…

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு பெரும் ரசிக வட்டாரத்தை விஜய் கொண்டுள்ளார். வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குவதாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. சினிமா துறையை அடுத்து அரசியலுக்கு வருவதற்கான திட்டத்தில் உள்ளார் விஜய்.

vijay

இதற்காக தனது ரசிகர் மன்றங்களை அவர் பயன்படுத்தி வருகிறார். இதற்காக மக்களுக்கு சில நன்மைகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சினிமாவில் வெகு காலங்களாக இருந்து வரும் மீசை ராஜேந்திரனிடம் இதுக்குறித்து கேட்கப்பட்டது.

கோபமான மீசை ராஜேந்திரன்:

விஜய் சமீபத்தில் இலவச உணவு வழங்கும் நிகழ்வு ஒன்றை செய்தார். இதுக்குறித்து மீசை ராஜேந்திரனிடம் விஜயகாந்த், எம்.ஜி.ஆரின் இடத்தை அடுத்து விஜய் பிடிக்கிறாரா? என கேட்டார் நிருபர்.

இதனால் கோபமான மீசை ராஜேந்திரன் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் எல்லாம் எவ்வளவு செஞ்சிருக்காங்க தெரியுமா? எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முழுக்க மாணவர்களுக்கு உணவு போட்டவர். அதே போல விஜயகாந்த்தும் கட்சிக்கு வருவதற்கு முன்பே மக்கள் பலருக்கும் உணவளித்தவர், பல நன்மைகளை செய்தவர்.

ஆனால் விஜய் அவர்களை போல அல்ல. அவர் அரசியல் ஆசை வரும் முன்னர் எத்தனை பேருக்கு உணவளித்தார், யாருக்குமே இல்லை. அப்படி என்றால் இப்போது அவர் செய்வது எல்லாம் அரசியலுக்காகவே தவிர மக்களுக்காக அல்ல. அதனால் அவரை விஜயகாந்த், எம்.ஜி.ஆருடன் சேர்த்து பேசாதீர்கள் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:என்ன பாத்ததும் கமல் முகத்த திருப்பிக்கிட்டார்.. இதுதான் எங்கள் உறவு!. போட்டு உடைத்த ராதாரவி..

Published by
Rajkumar