
Cinema News
நல்லா இல்லன்னு தெரிஞ்சும் அந்த படத்துல ஏன் நடிக்கிற? – கமலுக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய அறிவுரை..!
Published on
By
சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் ஒரு நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். இதனால் திரைத்துறையில் பல பிரபலமான நட்சத்திரங்களுடன் கமல்ஹாசனுக்கு பழக்கம் இருந்தது.
அதிலும் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரது படத்திலுமே குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே நடித்துள்ளதால் அவர்களிடமும் நல்ல பழக்கத்தில் இருந்தார். கமல்ஹாசன் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் என்றாலும் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானபோது கமல்ஹாசன் திரைக்கதை மீது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
அப்போது அவருக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது. அதிக படங்களில் நடித்தால் அதிக பணம் கிடைக்கும் என நினைத்தார் கமல். இதனால் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்தார். அப்போது ஒருமுறை ஒரு படத்தின் வெளியீட்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர் வருகை தந்திருந்தார்.
எம்.ஜி.ஆரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஐயா, நல்ல படத்துல நடிக்கும்போது நான் உங்களை அழைச்சிட்டு வந்து அந்த படத்தை போட்டு காட்டுறேன் என கூறியுள்ளார் கமல். உடனே எம்.ஜி.ஆர் “ஓ நல்ல படம் இல்லைன்னு தெரிஞ்சுதான் இதுல நடிச்சிருக்கியா?” என ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.
அதன் பிறகு கிடைத்த படத்தில் எல்லாம் நடித்தால் வெகு காலத்திற்கு சினிமாவில் நிற்க முடியாது. எனவே நல்லா இல்லாத படங்களில் நடிக்க வேண்டாம் என கமலுக்கு அறிவுரை கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...