Categories: Cinema News latest news throwback stories

அண்ணன் மீது இவ்வளவு பாசமா!.. எம்.ஜி.ஆர் எடுத்த அதிரடி முடிவு… ஆனால் நடந்துதான் டிவிஸ்ட்!..

மக்கள் திலகத்திற்கு சிறு வயது முதலே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பல நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அப்படித்தான் அவருடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். மதுரையில் உள்ள ஒரிஜினல் நாடக கம்பெனியில் வேலை பார்த்த பொழுது பியூஸ் சின்னப்பா ராஜபாட்டை யாக நாடகத்தில் நடித்து வந்தார்.

mgr banumathi

எம்.ஜி.ஆரின் அண்ணனும் சின்னப்பாவின் நண்பருமான சக்கரபாணியும் அந்நாடாக கம்பெனியில் வேலை செய்து வந்தார். குரல் வளம் சரியில்லாத காரணத்தினால் சின்னப்பாவிடம் இருந்து ராஜபாட்டை வேடம் பறிக்கப்பட்டது. சிறு சிறு  வேடங்கள் சின்னப்பாவுக்கு கொடுக்கப்பட்டது .

mg3

அது அவருக்கு அதிருப்தி ஏற்படுத்தியது. ரகசியமாக அங்கிருந்து வெளியேற நினைத்தார். போகும்போது ராஜபாட்டை வேடத்தின் ஆபரணங்களை எடுத்துக்கொண்டு போய்விட்டார் . இதை அறிந்த நாடக வாத்தியார் கந்தசாமி முதலியார் நெருங்கிய நண்பரும், எம்.ஜி.ஆரின் அண்ணனுமான சக்கரபாணியிடம் விசாரணை நடத்தினார்.

எம்.ஜி.ஆரோடு அவரின் அண்ணன் சக்கரபாணியும் நாடகத்தில் நடித்து வந்தார். அப்பொழுது நீயும் கூட்டு களவாணி தானே என்று கோபத்தில் பிரம்பை ஓங்கினார். அப்போது தடுத்து முன் வந்து நின்றார் எம் ஜி ஆர். இனிமே உனக்கு இங்கு வேலை இல்லை என ஆத்திரத்தில் திட்டினார் கந்தசாமி முதலியார்.  சக்கரபாணி பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

mgr 2

இதை கவனித்த எம்.ஜி.ஆர் உன்னுடன் நானும் வரேன் என்று கூறினார்.  உடனே கந்தசாமி ”நீ போக வேண்டாம் உங்க அண்ணன் மட்டும் போகட்டும்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர்” என் அண்ணன் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன்” என்று சொன்னார். அப்பொழுது ராஜபாட்டையாக எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருப்பதால் ‘இருவரும் போக வேண்டாம்.. உனக்காக இச்செயலை மன்னிக்கிறேன்’ என்றார் கந்தசாமி வாத்தியார்.

இப்படி தன் அண்ணணுக்காக நாடக கம்பெனியிலிருந்து வெளியேறத் துணிந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

Published by
SATHISH G