mgr
திரையுலகில் நடிகராக எம்.ஜி.ஆர் வளர்ந்து வந்த அதே நேரத்தில்தான் கலைஞர் கருணாநிதி கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் வளர்ந்தார். எம்.ஜி.ஆர் நாடகங்களிலும், சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர். அதேபோல் தமிழ் புலமை கொண்ட கலைஞர் கருணாநிதி பத்திரிக்கைகளில் பணிபுரிந்து வந்து அதன்பின் சினிமாவில் வசனம் எழுத துவங்கியவர்.
எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் முதன் முதலாக எதற்காக சந்தித்து கொண்டார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்!.. அந்த காலத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் என்பது பிரபலமான பட தயாரிப்பு நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனம் நாடகத்தில் வெற்றிபெற்ற ஒரு கதையை சினிமாவாக எடுக்க முடிவு செய்தனர். அப்போது சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட முடிவெடுத்தனர். அதேபோல், சிதம்பரம் ஜெயரமான் சிபாரி செய்ததால் குடியரசு பத்திரிக்கையில் பணிபுரிந்து வந்த கருணாநிதியை வசனம் எழுத வைக்கலாம் முடிவு செய்தனர்.
இந்த படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆரும், வசனம் எழுதுவதற்காக கருணாநிதியும் கோவை வந்தபோதுதான் இருவரும் முதன் முதலாக சந்தித்து கொண்டு அறிமுகமாகினர். அப்படி உருவான திரைப்படம்தான் ராஜகுமாரி. 1947ம் வருடம் வெளிவந்த அந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை. ஏ.எஸ்.ஏ.சாமி என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படத்திற்கு பின் எம்.ஜி.ஆர் கருணாநிதி நட்பு வளர்ந்தது. இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான அபிமன்யூ, மந்திர குமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்த படங்களின் வெற்றி அவருக்கு பராசக்தி படத்தில் வசனம் எழுத அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பராசக்தி திரைப்படம் திரையுலகில் கருணாநிதியை ஒரு பிரபலமான வசனகர்த்தாவாக மாற்றியது.
நடிகர் – வசனகர்த்தா என துவங்கிய எம்.ஜி.ஆர் கருணாநிதி நட்பு பல வருடங்கள் நீடித்தது. ஆனால், அரசியல் காரணமாக அவர்களின் நட்பு முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் இயக்கத்தில்…
Vijay TVK:…
2025 Movies:…
Vijay: தற்போது…
இந்த வருட…