Connect with us

Cinema News

ரஜினியை அழைத்து அடித்து அனுப்பினாரா எம்.ஜி.ஆர்.?! உண்மை தகவல் இதுதான்..,

மக்கள் திலகம் எம்,ஜி.ஆர் மிகவும் பலம் பொருந்தியவர். தனக்கு தவறு என்று என்று தெரிந்தால், அந்த தவறை செய்பரை அடித்தே விடுவார். எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு பலரும் வந்து அடிவாங்கியுள்ளனர். என்கிற வதந்தியை நாம் பல முறை கேட்டிருப்போம். உண்மையில் அப்படி என்னதான் நடந்திருக்கும் என எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்களுக்கு மாட்டுமே தெரியும்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் ரஜினிகாந்தை, எம்ஜிஆர் தனது தோட்டத்திற்கு வரவழைத்து அடித்து விட்டார் என்ற வதந்தி பல நேரங்களில் பல யூடியூப் சேனல்களில் பதிவாகி வந்துள்ளன. இதனை உண்மை எனவும் பலர் நினைத்துள்ளனர்.

இந்த வதந்தி குறித்து அண்மையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் இதயக்கனி விஜயன் கூறுகையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். எம்ஜிஆர் ரஜினியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து உண்மைதான். ஆனால் அது சாதாரண சந்திப்பு மட்டுமே.

உண்மையில் ரஜினி அந்த சந்திப்பிற்கு சற்று பயந்து போய் தான் சென்றிருந்தார் ஆனால் எம்ஜிஆர் அவரை பக்குவமாக வரவேற்று, ‘ நீங்கள் தற்போது வெற்றிகரமாக நடிகராக இருக்கிறீர்கள். நானும் உங்களை போல கஷ்டப்பட்டு வந்தவன் தான். எனது அனுபவங்களை கூறுகிறேன். அது உங்களுக்கு கை கொடுக்கும்.’ என தனது அறிவுரைகளை மட்டுமே அவருக்கு வழங்கினார். அதற்கு ரஜினி கூட, ‘ நான் பயந்து போய் இங்கி வந்தேன் ஆனால் தாங்கள் என்னிடம் பேசியது எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.’ என்று மகிழ்ச்சியுடன் அந்த அலுவலகத்தை விட்டு பிரிந்து சென்றாராம்.

இதையும் படியுங்களேன் – ஒரு தடவ கூட இத நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செஞ்சதில்லை.! ஆதாரம் இதோ..,

பலர் தங்களது சுய விளம்பரத்திற்காக தவறான கருத்துக்களை அப்படியே யூடியூபில் பதிவேற்றி வருகின்றனர். எம்ஜிஆருடன் சிலர் மட்டுமே நெருக்கமாக இருந்துள்ளனர்.  அவர்களுக்கு மட்டுமே எம்ஜிஆரின் உண்மையான மனதை பற்றி தெரியும் என்று அந்த பத்திரிக்கையாளர் தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top