Categories: Cinema News latest news throwback stories

எம்ஜிஆரும் சிவாஜியும் வேற லெவலில் நடித்த திரைப்படங்கள்.. ஆனால் இதில் சோகம் என்னன்னா!…

எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு நாடகத் துறையில் மிகப் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்தனர். அப்போது இருவருமே பெண் வேடங்களில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக சிவாஜி பெண் வேடத்தில் நடிப்பதை பார்ப்பதற்காகவே தனி கூட்டம் சேருமாம். அந்த அளவுக்கு சிவாஜியின் நடிப்புக்கு ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள்.

MGR and Sivaji

அதன் பின் அவர்கள் சினிமாவில் நுழைந்து புகழ்பெற்ற பிறகு, இருவருமே தங்களது திரைப்படங்களில் பெண் வேடத்தில் நடித்திருக்கின்றனர். அவ்வாறு என்னென்ன திரைப்படங்களில் அவர்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1968 ஆம் ஆண்டு “காதல் வாகனம்” என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் நாகேஷ், அசோகன், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். எம்.ஏ.திருமுகம் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Kadhal Vaaganam

இதில் அசோகன், ஜெயலலிதாவை கட்டிப்போட்டிருக்க அவரை பெண் வேடத்தில் மீட்க வருவார் எம்.ஜி.ஆர். அந்த காட்சியில் “என்ன மேன் பொண்ணு நான்” என்ற பாடலை எம்.ஜி.ஆர் பெண் குரலில் பாடுவது போல் அமைந்திருக்கும்.

இதனை தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு “குங்குமம்” என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக சாரதா நடித்திருந்தார். இவர்களுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன் ஆகியோர் நடித்திருந்தனர். கிருஷ்ணன்-பஞ்சு இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Kungumam

இதில் எஸ்.எஸ். ராஜேந்திரன் இடம்பெற்ற ஒரு காமெடி காட்சியில் சிவாஜி கணேசன் பெண் வேடத்தில் நடித்திருந்தார். மிகவும் ரசிக்கும்படியான காட்சியாக அந்த காமெடி காட்சி அமைந்திருக்கும்.

ஆனால் இதில் ஒரு சோகம் என்னவென்றால், எம்.ஜி.ஆரின் “காதல் வாகனம்” மற்றும் சிவாஜி கணேசனின் “குங்குமம்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே வெற்றிப்படமாக அமையவில்லை. இந்த இரு ஜாம்பவான்களும் பெண் வேடத்தில் நடித்திருந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய படையெடுத்த இயக்குனர்கள்… ஸ்ரீதர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா?

Published by
Arun Prasad