Categories: Cinema News latest news throwback stories

ஒரே படத்துக்காக மோதிய எம்.ஜி.ஆர் – ஸ்ரீதர்!.. கலைவாணர் சொன்ன ஒரு வார்த்தை.. அடங்கிய மக்கள் திலகம்..

பழங்கால சினிமாவில் காதலை விதவிதமாக தன் படங்களின் மூலம் சொல்வதில் வல்லவர் இயக்குனர் ஸ்ரீதர். இவரின் பெரும்பாலான படங்கள் காதல் கதைகளை மையமாக கொண்டே எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு தக்க உதாரணமாக இருந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம்.

mgr1

அந்த படத்தில் இரு வெவ்வேறான காதல் கதைகள், அதை அற்புதமாக காட்டியிருப்பார் ஸ்ரீதர். காதலிக்காதவர்கள் கூட அந்த படத்தை பார்த்து காதல் மீது ஈர்ப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு அணு அணுவாக ரசித்து படத்தை இயக்குபவர் தான் ஸ்ரீதர்.

இதையும் படிங்க : பீச்சுக்கு காத்துவாங்க போன கே.பி.சுந்தராம்பாள்… தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததோ ஒரு டெரிஃபிக் வில்லன்… ஆஹா!!

அதனாலேயே இவருக்கு அந்த காலத்தில் ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனராம். குறிப்பாக கல்லூரி பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வந்திருக்கிறார் ஸ்ரீதர். இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வசனகர்த்தாகவும் வலம் வந்தவர் ஸ்ரீதர்.

sridhar

இவரின் தயாரிப்பில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கின்றன. அப்படி பட்ட ஒரு படம் தான் ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம். இந்த திரைப்படம் சிவாஜி முதன் முதலாக இரு வெவ்வேறான கதாபாத்திரங்களில் நடித்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி நடித்தார்.

1958 ஆம் ஆண்டும் வெளியான உத்தம புத்திரன் திரைப்படத்தை ஸ்ரீதர் தயாரித்தார். ஆனால் இந்த படத்தை எம்ஜிஆரும் தயாரிக்க எண்ணினாராம். உத்தம புத்திரன் திரைப்படத்தை நான் தான் தயாரிக்க போகிறேன் என்று ஸ்ரீதர் அறிவிப்பு விட்ட அதே நாளில் எம்ஜிஆரும் தயாரிக்க போவதாக அறிவித்திருக்கிறார்.

sivaji

இந்த அறிவிப்பை பார்த்த அன்றைய தமிழ் சினிமா என்ன ஆக போகிறதோ என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையீட்டு இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்திருக்கிறார். எம்ஜிஆரிடம் பேசிய என்.எஸ்.கிருஷ்ணன் இந்த படத்தை ஸ்ரீதருக்கு விட்டுக் கொடுத்துவிடு என்று கூற மறுப்பு கூறாமல் எம்ஜிஆரும் படத்தை ஸ்ரீதருக்கே விட்டுக் கொடுத்தாராம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் அவரது யுடியூப் சேனலில் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini