Categories: latest news throwback stories

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நடிகை!..கடுப்பான எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…

தமிழ் சினிமாவில் அந்த காலங்களில் மூவேந்தர்களாக இருந்தவர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன். இந்த மூவருடனும் சரி சமமாக ஜோடி சேர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சவுகார் ஜானகி. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வந்து கைக்குழந்தையுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் சவுகார் ஜானகி.

சவுகார் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தார். சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்த சவுகார் ஜானகி எம்.ஜி.ஆருடன் மாடப்புறா என்ற படத்தில் முதன் முதலில் இணைகிறார்.

இதையும் படிங்க : கிடப்பில் போடப்பட்ட வெந்து தணிந்தது காடு 2… விடிவியை குறிவைக்கும் கௌதம் மேனன்… அப்போ அவ்வளவுதானா??

மாடப்புறா படத்தின் படப்பிடிப்புகள் போய்க் கொண்டிருக்க சவுகார் ஜானகிக்கு ஒரு பழக்கம் இருக்குமாம். யாராவது வந்தால் இவர் எழுந்து வணக்கம் சொல்லிவிட்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து விடுவாராம் சவுகார் ஜானகி. அதே போல் தான் ஒரு சமயம் இரவு படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர் வந்தாராம். கூடவே எம்.ஆர்.ராதாவும் இருந்தாராம்.

எம்.ஜி.ஆரை பார்த்த சவுகார் எழுந்து வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து விட்டாராம். இதை பார்த்துக் கொண்ட எம்.ஜி.ஆர் எம்.ஆர். ராதாவை அழைத்து ‘இது எனக்கு பிடிக்கவில்லை, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார்’ என்று சொல்ல எம்.ஆர்.ராதா அவருடைய பாணியில் ‘ஐய்யே இந்த பொண்ணு இங்க பொறக்க வேண்டியதே இல்லை, லண்டனில் பொறக்க வேண்டியது, அப்படித்தான் உட்காரும்’ என்று சொன்னாராம். மறு நாள் அந்த படத்தில் இருந்தே நீக்கப்பட்டாராம் சவுகார் ஜானகி. அவருக்கு பதிலாக வசந்தி என்ற நடிகையை நடிக்க வைத்திருக்கின்றனர் படக்குழு. இது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது என ஒரு பேட்டியில் சவுகார் ஜானகியே தெரிவித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini