
Cinema News
பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்!…
Published on
By
சினிமாவில் பெரிய அளவில் சாதித்த கலைஞர்களுக்கும் கூட சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆருக்கும் இது பொருந்தும். நாடகங்களில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த அவர் பல தமிழ் மற்றும் ஆங்கில நாவல்களை படமாக்கி நடித்திருக்கிறார்.
துவக்கத்தில் அவர் நடித்தது எல்லாமே சரித்திர கால மன்னர்கள் படம்தான். அந்த கெட்டப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருத்தமாகவும் இருக்கும். அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்திலும் அப்படித்தான் நடித்தார். அதேநேரம், மக்களோடு மக்களாக நின்று அவர்களின் பிரச்சனையை பேசும் போராளியாக நடிப்பதும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
இதையும் படிங்க: பின்னணி இசையால் வந்த பிரச்சனை!. சிவாஜி பட இயக்குனரை ஒதுக்கி வைத்த எம்.ஜி.ஆர்..
அதனால்தான் நாடோடி மன்னன் படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தை அப்படி அமைத்தார். ஒருகட்டத்தில் சரித்திர படங்களில் நடிப்பதை நிறுத்திய சிவாஜி சமகால பிரச்சனைகளை தனது படங்களில் பேச துவங்கினார். ஒரு கம்யூனிஸ்ட் போல, ஏழைகளின் பங்காளனாக மாறி அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும், தட்டி கேட்கும், அவர்களுக்காக போராடும் கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்தார்.
ஆனால், சரித்திர கதைகள் மீது இருந்த ஆர்வம் அவருக்கு குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு பல வருடங்கள் இருந்து. நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கிடைக்காததால் அவருக்கு அது சாத்தியப்படவில்லை.
இதையும் படிங்க: கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..
எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியபின் ஒரு நாள் இயக்குனர் பாரதிராஜாவை அழைத்து ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நீ திரைப்படமாக எடுக்க வேண்டும். எனக்கும் அப்படத்தில் நடிக்க ஆசைதான். ஆனால், தூங்க கூட நேரமில்லை. இந்த படத்தில் கமல், ஸ்ரீதேவியை முக்கிய கதாபாத்திரமாக போட்டு எடு’ என சொல்லி இருக்கிறார்.
ஆனால், என்ன காரணமோ பாரதிராஜாவுக்கு அதில் ஆர்வமில்லை. எனவே, அப்படத்தை எடுக்கவில்லை. ஆனால், இதுபற்றி அவர் கமலிடம் சொல்லி இருந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க கமலும் முயற்சி செய்தார். ஆனால், நடக்கவில்லை. ஆனால், அதை பல வருடங்களாக போராடி மணிரத்தினம் இரண்டு பாகங்களாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜியின் ஆஸ்தான இயக்குனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்!.. காரணம் இதுதான்!…
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...