
Cinema News
ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்!. கோடிகளை குவித்த எவர்கிரீன் சூப்பர் ஹிட் படம்!..
Published on
By
Actor MGR: சிறு வயது முதலே வறுமையையும், கஷ்டங்களையும் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ யாரும் பட்டினியோடு இருக்கக் கூடாது என நினைத்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல், நமக்கு யாராவது உதவ மாட்டார்களா.. நம்மை தூக்கிவிட மாட்டார்களா என பல வருடங்கள் ஏங்கியிருக்கிறார். அதனால்தான் எல்லோருக்கும் உதவ வேண்டும். நம்மால் முடிந்த வரை பலரையும் மேலே தூக்கிவிட வேண்டும் என வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்
நினைத்தது போலவே வாழ்ந்தும் காட்டினார். இவரிடம் உதவி பெற்றவர்கள் பலரும் உண்டு. யாரையும் எதிரியாக நினைக்க மாட்டார். இவரை எதிரி என நினைத்து காயப்படுத்தியவர்களுக்கும் அவர் உதவினார் என்பதுதான் ஹைலைட். 1950,60களில் ஒரு பழக்கம் இருந்தது. எம்.ஜி.ஆரை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் சிவாஜி பக்கம் செல்ல மாட்டார்கள். அதேபோல், சிவாஜியை வைத்து படமெடுத்த சில இயக்குனர்கள் எம்.ஜி.ஆர் படங்களை இயக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: ஆபிஸ் பாய் என அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர்… அதையும் தாண்டி சாதித்து காட்டிய எம்.எஸ்.வி…
இதற்கு படங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில், அப்போது சில இயக்குனர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனராகவே இருப்பார்கள். சிவாஜியை வைத்து கர்ணன், பலே பாண்டியா, கப்பலோட்டிய தமிழன் என பல திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு.
சிவாஜியை வைத்து இவர் இயக்கிய சில படங்கள் சரியாக ஓடாமல் போய் நஷ்டம் அடைந்தார். எனவே, எம்.ஜி.ஆரிடம் சென்று பேசி, அவரை வைத்து ஒரு படமெடுக்க முடிவு செய்தார். பி.ஆர்.பந்துலுவை பார்த்த எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று பேசினார். பந்துலு தனது ஆசையை சொல்லவும் ‘கண்டிப்பாக நடிக்கிறேன்’ என சொன்னார். கதையை பற்றி பந்துலு பேச துவங்க ‘கதை இருக்கட்டும். எனக்கு எவ்வளவு அட்வான்ஸ் கொடுப்பீங்க’ என சிரித்துகொண்டே கேட்க பந்துலு பதறிப்போனார். ஏனெனில் அவர் பணம் எதையும் எடுத்து செல்லவில்லை.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படம் ஓடிய தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள்!… காரணம் என்ன தெரியுமா?…
அப்போது பந்துலுவுடன் சென்றிருந்த வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் உடனே வெளியே போய் பந்துலுவின் கார் ஒட்டுனரிடம் ஒரு ரூபாயை வாங்கி வந்து பந்துலுவிடம் கொடுக்க அவர் அதை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர் வாங்கி கொண்டார்.
அப்படி உருவான படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் பல லட்சங்களை வசூலித்தது. இப்போது கூட இந்த படம் தமிழகத்தில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. பலமுறை தொலைக்காட்சிகளிலும் இப்படத்தை பார்க்க முடியும். அப்படிப்பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசூல் கோடிகளை தாண்டியிருக்கும் என கணிக்கலாம்!..
இதையும் படிங்ரஜினியின் ஆசையை கேட்டு ஆடிப்போன பாலசந்தர்… கைக்கொடுத்த எம்.ஜி.ஆர்!…
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...