Categories: Cinema News latest news throwback stories

எம்ஜிஆரை நம்பி வந்த நட்சத்திர காதல் ஜோடி!..என்ன செஞ்சார் தெரியுமா புரட்சித்தலைவர்?..

தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க வந்து பின் ஒருவருக்கொருவர் பிடித்து போக நிஜவாழ்க்கையிலும் தம்பதிகளாக ஜொலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இந்த சம்பவம் இந்த தலைமுறைகளுக்கு மட்டுமில்லை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாகவே இது தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது.

என்.எஸ்.கிருஷ்ணனில் இருந்து இன்றைய தலைமுறைகள் வரை நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதில் ஒரு தம்பதி தான் தங்கள் திருமணத்தை நீங்கள் தான் நடத்தி வைக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் வேண்டி நின்றிருக்கின்றனர்.

அது வேறு யாருமில்லை நடிகர் ராமராஜன் , நடிகை நளினி. ராமராஜன் மீது தீராத காதல் கொண்ட நளினி வீட்டை விட்டு வெளியேறி ராமராஜனிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார். நம் திருமணம் எம்ஜிஆர் தலைமையில் நடைபெற்றால் நம் வீட்டார் அதை பெருமையாக கருதி நம்மை சேர்த்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் திருநாவுக்கரசரின் உதவியை நாடியிருக்கின்றனர்.

இதையும் படிங்க : அமேசான் ப்ரைமால் அசிங்கப்பட்ட பார்த்திபன்… என்ன ப்ரைம்ஜி புளூசட்டைக்கு சப்போர்ட்டா?

அமைச்சரும் எம்ஜிஆர் அப்பொழுது எங்கு இருக்கிறார் என்று விசாரித்து சேலத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார் இந்த காதல் ஜோடியை. அவர்கள் சேலம் போன சமயத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஓசூர் சென்று விட்டாராம். ராமராஜனும் விடாது ஓசூர் சென்று நிலைமையை தெரிவிக்கலாம் என்று போக அங்கு இருந்து சென்னை வந்து விட்டாராம் எம்ஜிஆர்.

ஆனாலும் மனம் தளராது ராமராஜன் நளினி சென்னை வந்து எம்ஜிஆரை ராமாவரம் தோட்டத்திற்கு சென்று அவர்களின் நிலைமையை கூறிய பின் சரி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்து நான் வந்து விடுகிறேன் என்று எம்ஜிஆர் வாக்குக் கொடுக்க சொன்ன நேரத்தில் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini