Categories: Cinema News latest news throwback stories

ரஜினிக்கு ஜோடியாக அந்த நடிகை நடிக்க கூடாது.. செக் வைத்த எம்.ஜி.ஆர்….

முன்னாள் முதல்வரும், மறைந்த நடிகருமான எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் கலர் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய போது திரைத்துறையில் நடிக்க துவங்கியவர் நடிகர் ரஜினிகாந்த். பாலச்சந்தர் இவரை அரங்கற்றவேளை படத்தில் அறிமுகம் செய்தார். குணச்சித்திர வேடம், வில்லன் என நடிக்க துவங்கி பின்னர் ஹீரோவாக மாறினார்.

அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரோடு ஜோடி போட்டு நடித்த சில நடிகைகள் ரஜினியுடன் நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர் அதை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை ரஜினியோடு ஜெயலலிதா ஜோடி போட்டு நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.

அதேபோல், மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, சரத்பாபு நடித்து இப்போது வரை பலரும் பேசும் படமாக அமைந்த முள்ளும் மலரும் படத்தில் ரஜினிக்கு முதல் ஜோடியாக நடித்தவர் நடிகை லதாதான். அவரை வைத்து 10 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.

ஆனால், அப்படத்தில் லதா நடிப்பதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. எனவே, அப்படத்திலிருந்து லதாவை தூக்கிவிடுமாறும், 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த செலவை கொடுத்து விடுவதாக எம்.ஜி.ஆர் தரப்பில் கூறப்பட்டது. அதன்பின், லதாவுக்கு அப்படத்தில் தூக்கப்பட்டு அவருக்கு பதில் நடிகை படாபட் ஜெயலட்சுமி நடித்தார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா