
Cinema News
MGR: என்னை அவமானப்படுத்தவே இந்த பாடல் வரிய எழுதினீங்களா? எம்ஜிஆரின் கோபத்திற்கு ஆளான வாலி
Published on
By
MGR: நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பிறகு எம்ஜிஆர் பவானி என்ற பெயரில் அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தை கேமிராமேன் மஸ்தான் என்பவரை வைத்து இயக்கவும் திட்டமிட்டார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படம் நடக்காமல் போனது. அதன் பிறகுதான் அரச கட்டளை படம் உருவானது. ஆனால் இந்தப் படத்திற்கு மஸ்தான் இயக்குனர் இல்லை. எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணி இயக்குனராக பணியாற்றினார்.
எம்ஜிஆர் பிக்சர்ஸ்தான் படத்தை தயாரித்தது. படத்திற்கு பாடல் வரி எழுத வாலி வரவழைக்கப்பட்டார். அந்தக் காலத்தில் எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களுக்கு வாலிதான் வரிகள் எழுதுவார். மேலும் வாலியை எம்ஜிஆர் ஆண்டவரே என்று அழைப்பார். பதிலுக்கு வாலியும் எம்ஜிஆரை ஆண்டவரே என்றுதான் அழைப்பார். முதல் பாடலுக்கான காட்சியை சொல்ல அற்புதமான வரியை வாலி எழுதி கொடுத்தாராம். வரியை கேட்டதும் சந்தோஷத்தில் எம்ஜிஆர் வாலியை கட்டியணைத்து கொண்டாராம்.
இதையும் படிங்க: Biggboss 8: பிக்பாஸ் சவுந்தர்யாவின் 17 லட்சம் ஸ்கேம்.. பிரச்சினை எங்கு ஆரம்பிச்சது தெரியுமா?
இப்போது இரண்டாவது பாடல் வரி எழுத வேண்டும். சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஹீரோயின் பாடல் பாடவேண்டும். ஆனால் ஹீரோயினை பாடவிடாமல் அந்த சர்வாதிகார ஆட்சியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள். அந்த நேரத்தில் ஹீரோவான எம்ஜிஆர் ஹீரோயினை பாட அழைப்பது போல காட்சி. இதுக்கு பாடல் வரி எழுத வாலி யோசிக்கிறார். அருகில் எம்ஜிஆர், சக்கரபாணி மற்றும் இயக்குனர் கே. சங்கர் இருக்கிறார்கள்.
‘ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை நிலைக்காது’ என்ற வரியை எழுதி எம்ஜிஆரிடம் வந்து காட்டுகிறார் வாலி. அதை பார்த்ததும் எம்ஜிஆருக்கு வந்ததே கோபம். முகமெல்லாம் சிவந்து விட்டதாம். என்னை அவமானப்படுத்தவே இந்த பாடல் வரியை எழுதியிருக்கிறீர்கள். இந்த வரியை எழுதி ரிக்கார்டு செய்து பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க செய்து மொத்தமாக என்னை அவமானப்படுத்தவேண்டும் என எத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தீங்க என்றெல்லாம் பொங்கி எழுந்தாராம் எம்ஜிஆர்.
ஆனால் வாலிக்கு ஒன்றுமே புரியவில்லையாம். இந்த வரியில் அப்படி என்ன இருக்கிறது என வாலி கேட்டிருக்கிறார். மூன்று வருஷத்திற்கு முன் சிவாஜி நடிப்பில் வெளியான படம் தான் ஆண்டவன் கட்டளை. அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. இப்போது என் நடிப்பில் அரச கட்டளை. உங்க வரியை பாருங்க. ஆண்டவன் கட்டளை முன் அரச கட்டளை நிலைக்காது என எழுதினால் என்ன அர்த்தம்.
இதையும் படிங்க: Keerthy Suresh: கார் ரேஸில் குதித்த கீர்த்தி சுரேஷ்! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? வைரலாகும் வீடியோ
arasakattalai
சிவாஜியின் ஆண்டவன் கட்டளை படத்திற்கு முன் எம்ஜிஆரின் அரச கட்டளை படம் எடுபடாது. தேறாது என்றுதானே அர்த்தம் என சொல்ல அதன் பிறகுதான் வாலிக்கு புரிந்திருக்கிறது. என் சாமி முருகன் மேல் சத்தியமா அப்படி நினைத்து எழுதவில்லை என வாலி எத்தனையோ முறை சொல்லியும் எம்ஜிஆர் சமாதானம் ஆகவே இல்லையாம். அதன் பிறகு அந்த பாடலை வாலிக்கு கொடுக்காமல் வேறொரு கவிஞருக்கு கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல்தான் ‘ஆடி வா ஆடி வா ஆடிவா ஆடபிறந்தவளே ஆடிவா’ என்ற பாடலாக உருவானது.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...