Connect with us
mgr

Cinema News

நடுத்தெருவில் கண்ணீரோடு நின்ற உதவி இயக்குனர்!.. எம்.ஜி.ஆர் செய்த பேருதவி!…

எம்.ஜி.ஆர் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். அதாவது அவரிடம் யார் சென்று உதவி கேட்டாலும் அதை செய்து கொடுப்பார். எங்கு, யார் கஷ்டப்படுவதை அவர் பார்த்தாலும் அவர்களின் பிரச்சனை என்ன என விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பபார்.

அதனால்தான் எம்.ஜி.ஆரை எல்லோரும் கொடை வள்ளல் என அழைத்தனர். இன்னும் சொல்லப்போனால் கொடுப்பதற்காகவே சம்பாதித்தவர் அவர். எண்ணி பார்க்காமல் அள்ளி கொடுக்கும் பழக்கும் உடையவர். அதனால்தான் இத்தனை வருடங்கள் கழித்தும் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசுகின்றனர்.

mgr

கோபால கிருஷ்ணன் என்கிற ஒரு உதவி இயக்குனர் இருந்தார். எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் இவர் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். நல்ல நிலையில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் நொடிந்து போனார். அவர் குடியிருந்த வீட்டிற்கும் கூட பல மாதங்கள் வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே, அந்த வீட்டின் உரிமையாளர் அவரின் பொருட்களை வெளியே எடுத்து வீசிவிட்டு வீட்டை பூட்டிவிட்டார்.

கலங்கிப்போன கோபால கிருஷ்ணன் நடுத்தெருவில் நிற்கதியாக நின்ற தனது குடும்பத்தை நண்பர் ஒருவர் வீட்டில் தங்க வைத்துவிட்டு என்ன செய்வது என யோசித்த அவருக்கு எம்.ஜி.ஆர் நினைவுக்கு வந்தார். பல வருடங்கள் ஆகிவிட்டதே!. தன்னை அவர் நியாபகம் வைத்திருப்பாரா?.. உதவி செய்வாரா? என்கிற கேள்வியும் அவருக்குள் எழுந்தது. வாகினி ஸ்டுடியோவில் ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்தார்.

mgr

கோபால கிருஷ்ணன் அங்கே சென்று காத்திருந்தார். அவரை பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவரிடம் நலம் விசாரித்தார். எம்.ஜி.ஆர் அன்பாக பேசியதை கேட்டு கோபால கிருஷ்ணனுக்கு கண் கலங்கியது. தனது பிரச்சனையை சொல்ல துடித்துப்போன எம்.ஜி.ஆர் ‘இதை ஏன் முன்பே சொல்லவில்லை?’ என அன்பாக கடிந்துகொண்டு ‘சரி நீங்கள் போங்கள்’ என அனுப்பி வைத்தார். பின்னர் தனது உதவியாளர் மூலம் ரூ.10 ஆயிரத்தை அவருக்கு கொடுத்து அனுப்பினார். மேலும், அவருக்கு சில படங்களில் வேலை செய்யும் வாய்ப்பையும் பெற்று கொடுத்து அவரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார்.

Continue Reading

More in Cinema News

To Top