Categories: Cinema News latest news throwback stories

முக்கிய விஷயத்தை மறைத்த வாலி!.. கடுப்பான எம்.ஜி.ஆர்.. பிரச்சனையை முடித்து வைத்த பாடல்…

திரையுலகில் எம்.ஜி.ஆர் – வாலி இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. எம்.ஜி.ஆரின் பல வெற்றிப்பாடல்களை எழுதியவர் வாலிதான். குறிப்பாக எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்கு வாலி எழுதி கொடுத்த பாடல்கள் பெரிதும் உதவியது. எனவே, வாலி மீது எம்.ஜி.ஆர் அன்புடன் பழகி வந்தார்.

Kavingnar Vali

அதேநேரம் இருவருக்கும் இடையே சில சமயங்களில் சில பிரச்சனைகளும் வந்துள்ளது. ஆனால், அது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. ஒருசமயம் வாலி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமணத்தை நான்தான் நடத்தி வைப்பேன். திருமணம் செய்து கொள்ளவில்லை எனில், நீங்கள் சம்பாதிக்கம் பணம் உங்களுக்கு தெரியாமலேயே செலவாகிவிடும்’ என அடிக்கடி கூறி வந்தார்.

ஒருநாள் திடீரென எம்.ஜி.ஆரிடம் சொல்லாமலேயே வாலி திருமணம் செய்து கொண்டார். இதனால், கோபமடைந்த எம்.ஜி.ஆர் வாலியிடம் சில நாட்கள் பேசவே இல்லை. திருமணம் என்பது என் முடிவு. இதை அவரிடம் ஏன் சொல்ல வேண்டும். இதில் அவருக்கு என்ன கோபம்? என்கிற சுய கவுரவத்தில் வாலியும் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசவில்லையாம். மனைவி சொல்லியும் வாலி கேட்கவில்லையாம். இப்படியே சில நாட்கள் சென்றது. அப்போது எம்.ஜி.ஆர் தாழம்பூ எனும் படத்தில் நடித்து முடித்திருந்தார். படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள் இப்படத்தில் வாலி ஒரு பாடல் எழுதினால் பொருத்தமாக இருக்கும் என பேச துவங்கிவிட்டனர்.

எனவே எம்.ஜி.ஆர் காரை அனுப்பி வாலியை கூட்டி வரசொன்னாராம். வாலி அங்கே சென்றதும் அவருக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர் ‘நடந்ததெல்லாம் மறந்துடுங்க.. அவசரமாக ஒரு பாடல் தேவை எழுதி கொடுங்கள்’ என வாலியிடம் சொல்ல அப்போது வாலி எழுதிய பாடல்தான் ‘எங்கே போய்விடும் காலம்.. அது என்னையும் வாழ வைக்கும். கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்’ என்கிற பாடல்.

அதன்பின், எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களை வாலி எழுதியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த சீரியல் நடிகரும் ரகுவரனும் இவ்வளவு குளோஸ் பிரண்ட்ஸா?? இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கு…

Published by
சிவா