Categories: latest news throwback stories

ராமாபுரம் தோட்டத்தில் நடந்த திக்..திக்..சம்பவம்!.. நிலைகுலையாக இருந்த எம்.ஜி.ஆர்!.

சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஜல்லிக்கட்டு படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகலமாக ஏற்பாட் செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன். விழாவிற்கு அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரையும் நடிகர் திலகம் சிவாஜியையும் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்திருந்தார் சித்ரா.

இருவரும் விழாவிற்கு வருவதற்கு சம்மதித்தனர். முதல் நாள் இரவு சித்ரா விழாவிற்கான ஏற்பாடுகளை பார்த்துவிட்டு இரவு தூங்க வீட்டிற்கு சென்றார். மறு நாள் மாலை 6 மணி அளவில் விழா நடைபெறுவதாக இருந்தது. இரவு ராமாவரம் தோட்டத்தில் தொலைபேசி வாயிலாக சித்ராவிற்கு அழைப்பு வர விழாவிற்கு தலைவர் வரமாட்டார் என செய்தி கூற சித்ராவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

விழாவிற்கு லட்சக்கணக்கில் செலவு பண்ணுனது போக தலைவர் வரவில்லை என்றால் அனைவரின் முன் நமக்கு மானம் போய்விடுமே என்ற கலக்கத்தில் அன்று காலை சத்யராஜை அழைத்துக் கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கே சென்றிருக்கிறார் சித்ரா. மாடியில் தலைவர் இருக்க இவர்களை வர சொன்ன தலைவர் இவர்கள் எம்.ஜி.ஆரை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டு விட்டதாம்.

அந்த நிலையில் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். தலையில் தொப்பி இல்லை, லுங்கியுடன் தொழ தொழவென சட்டை, நான்கு நாள்களாக ஷேவ் பண்ணாத தாடியுடன் காட்சியளித்திருக்கிறார். இவர்கள் வற்புறுத்தவே மாலை விழாவிற்கு வந்தவர் தக தகவென மின்னிக்கொண்டு வந்தாராம் எம்.ஜி.ஆர். அதன் பிறகு தான் தெரிந்திருக்கிறது கடந்த 4 நாள்களாக அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பது. மேடைக்கு வந்ததும் சிவாஜி எம்.ஜி.ஆரை வாரி அணைத்து கொள்ள எம்.ஜி.ஆர் சிவாஜியை கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இந்த விழா முடிந்த 4, 5 நாள்களில் தான் எம்.ஜி.ஆர் இயற்கை எய்திருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini