Categories: Cinema News latest news throwback stories

ஒரு சாதாரண ரசிகனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற புரட்சித் தலைவர்… இப்படி ஒரு நடிகரா?…

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் எம்.ஜி.ஆர். தனது தனித்துவமான ஸ்டைலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் இவர். அது மட்டுமல்லாது நீண்ட ஆண்டுகள் தமிழக முதல்வராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு மிகப்பெரிய கொடை வள்ளலாக அறியப்பட்டவர் எம்.ஜி.ஆர்தான். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு தயங்காமல் உதவி செய்தவர். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

MGR

எம்.ஜி.ஆர் மிகப் பிரபலமான நடிகரானபோது அவருக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். அந்த ரசிகர்களில் ஒருவர் குழந்தைவேலு. இவர் எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றத்தில் மிக முக்கியமாக நபராக இருந்தவர். இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் முதல்வராக ஆன பிறகு குழந்தைவேலுவின் மாவட்டத்தில் இருந்து யாரையும் அமைச்சராக அறிவிக்கவில்லையாம்.

ரசிகரை அமைச்சராக்கிய எம்.ஜி.ஆர்.

ஆதலால் அந்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் எம்.ஜி.ஆரை சந்தித்து முறையிட்டார்களாம். அப்போது அந்த கூட்டத்தின் முன்னிலையால் சாதாரணமாக கைக்கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்த குழந்தை வேலுவை பார்த்து   “நீ அமைச்சராகுறியா” என்று கேட்டிருக்கிறார். இதனை கேட்டதும் குழந்தை வேலு உற்சாகமாக ஒப்புக்கொண்டாராம். அதன் பிறகு தனது தொகுதியில் நின்று வெற்றிபெற்று அமைச்சராக ஆகியிருக்கிறார். இவ்வாறு எம்.ஜி.ஆர் தனது தீவிர ரசிகரை அமைச்சராக ஆக்கியிருக்கிறார். இந்த தகவலை பத்திரிக்கையாளர் அந்தணன் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு பதில் சிம்புவா? இவ்வளவு பெரிய சீக்ரெட்டை ஒளிச்சி வச்சிருக்கீங்களே!!

Arun Prasad
Published by
Arun Prasad