1950, 60களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். குறிப்பாக எம்.ஜி.ஆர் – சிவாஜி ஆகியோரின் 95 சதவீத படங்களுக்கு இசையமைத்து அற்புதமான பாடல்களை கொடுத்தவர். ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என அழைக்கப்பட்டவர். 25 வருடங்கள் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இவர்தான்.
எம்.ஜி.ஆரை பொருத்தவரை அவர் நடிக்கும் படங்களுக்கான பாடலை அவர்தான் தேர்ந்தெடுப்ப்பார். அவருக்கு திருப்தியான மெட்டுக்கள் வரும்வரை இசையமைப்பாளரை விட மாட்டார். அதனால்தான் எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் காலத்தை தாண்டி இப்போதும் அவரின் ரசிகர்களால் முனுமுனுக்கப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தில் முதலில் குன்னக்குடி வைத்தியநாதனை இசையமைப்பாளராக போட்டு பின் திருப்தி இல்லாமல் எம்.எஸ்.வி-யிடம் சென்றார் எம்.ஜி.ஆர். ‘என்னை விட்டு அவரிடம் போனீர்கள்.. நான் யாரென காட்டுகிறேன்’ என ரோஷத்தில் ட்யூன்களை போட்டார் எம்.எஸ்.வி. ஆனால், எம்.ஜி.ஆர் வந்து ‘நான் நினைச்ச மாதிரி இல்ல விசு’ என ஒரு வரியில் சொல்லிவிட்டு போய்விடுவார்.
எம்.எஸ்.வி வேறு டியூன்களை போட்டு காட்டினால் ‘முதலில் போட்டதே கொஞ்சம் நன்றாக இருந்தது’ என்பார். சரி வெளிநாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் நிறைய இசைக்கருவிகளை பயன்படுத்தி போட்டு காட்டினால் ‘நன்றாக இல்லை’ என சொல்லிவிட்டு போய்விடுவார். ஒருகட்டத்தில் ‘பரவாயில்லை என் தலையெழுத்து பாட்டுக்களை ரெக்கார்டிங் செய்’ என சொல்லிவிட்டார். அந்த பாடல்களை கேட்ட எல்லோரும் எம்.எஸ்.வியை பாரட்டினார்கள்.
ஆனால்,எம்.ஜி.ஆர் எதுவுமே சொல்லதது எம்.எஸ்.வியை உறுத்திக்கொண்டே இருந்தது. திடீரென அவரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த எம்.ஜி.ஆர் ஒரு மாலையை அவரின் கழுத்தில்போட்டு கை நிறைய பணம் கொடுத்தார்.
எதுவும் புரியாமல் எம்.எஸ்.வி எம்.ஜி.ஆரை பார்க்க ‘நான் வேண்டுமென்றேதான் பாடல்கள் நன்றாக இல்லை என சொன்னேன். இப்ப பாத்தியா பாட்டுலாம் எப்படி வந்திருக்கு’ என பாராட்ட நெகிழ்ந்து போன எம்.எஸ்.வி எம்.ஜி.ஆரை கட்டி அணைத்துக்கொண்டாராம்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம் பெற்ற மெலடி பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Pradeep Ranganathan:…
Sivakarthikeyan: விஜய்…
Ajith: அமராவதி…
Rashmika Mandana:…
Ajith Vijay:…