Categories: latest news throwback stories

கிட்ட யாரும் நெருங்க கூடாது!..ஜெயலலிதாவுக்கு கை கொடுத்தவரை பந்தாடிய எம்ஜிஆர்!..

எம்.ஜி.ஆரின் புகழ் பாடாதவர்கள் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி யாரும் இருக்க மாட்டார்கள். எத்தனையோ தலைவர்கள் மறைந்திருந்தாலும் இன்று வரை எம்.ஜி.ஆரின் புகழுக்கு ஈடு இணை யாரும் இல்லை. சும்மா எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சுற்றிலும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

அந்த அளவுக்கு பேரையும் புகழையும் பெற்று விளங்கியிருக்கிறார் எம்ஜிஆர். மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்களின் நெருக்கத்தை பற்றியும் விமர்சிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் இருந்த நெருக்கம் ஒரு உன்னதமான அன்பு என்று சில பேட்டிகளில் அவர்களுடன் நெருக்கமாக இருந்த சிலர் கூறியதை பார்த்திருக்கிறோம்.

இதையும் படிங்க : ரஜினியின் கண்களை உறுத்தும் விக்ரம் படத்தின் வசூல்… இறங்கி ஆட தயாராகும் சூப்பர் ஸ்டார்…

இந்த நிலையில் யாராவது எம்ஜிஆருக்கு பிடிக்காத செயலை செய்தால் இராமாவரம் தோட்டத்தில் பெரிய விருந்தே கொடுப்பார் என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு நிகழ்வு தான் ஜெயலலிதா விஷயத்திலும் நடந்தது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக இருந்திருக்கிறார். அப்போது ஒரு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருக்கின்றனர்.

மேடையில் ஜெயலலிதா ஏறும்போது பழ மார்க்கெட் பிஸ்தாவான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ‘பழக்கடை’ பாண்டி ஜெயலலிதாவிற்கு கை கொடுத்திருக்கிறார். இது பிடிக்காத எம்ஜிஆர் பழக்கடை பாண்டியை அடித்துவிட்டாராம். இந்த பழக்கடை பாண்டி திமுக-விலிருந்து அதிமுக-விற்கு வந்தவர். இதே மாதிரியான மற்றுமொரு நிகழ்வு: பழக்கடை பாண்டி மதுரையில் ஜெயலலிதாவுக்கு சேலைகள் வாங்கிக் கொடுத்து, மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டதனால், பின் ராமாவரம் தோட்டத்தில் அடி வெளுக்கப்பட்டது சுவாரசியமான தனி கதை. இந்த தகவலை அண்ணாவிலிருந்து ஜெயலலிதா வரை கிட்டத்தட்ட 5 முதல்வர்களுக்கு டிரைவராக இருந்த பவானி கிருஷ்ணன் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini