Categories: Cinema News latest news throwback stories

சைவ சாப்பாட்டை பார்த்துவிட்டு படப்பிடிப்பை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்… ஏன் தெரியுமா?

தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர், தனது திரைப்படத்தில் பணியாற்றும் தொழிலாளிகளிடம் மிகுந்த அன்பை வெளிப்படுத்துவார் என பலரும் கேள்விப்பட்டிருப்போம். படப்பிடிப்பில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதனை உடனே தீர்த்து வைப்பாராம் எம்.ஜி.ஆர். அதே போல் எந்த விதத்திலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வாராம்.

இவ்வாறு பல பெருமைகளை உடைய எம்.ஜி.ஆர் ஒரு முறை சைவ சாப்பாட்டை பார்த்துவிட்டு படப்பிடிப்பை நிறுத்துவிட்டாராம். அவர் ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

MGR

இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் காம்போவை குறித்து நாம் அறிந்திருப்போம். இதில் கணேஷ், எம்.எஸ்.வியிடம் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது மாமனாரும் பிரபல சினிமா தயாரிப்பாளருமான ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து வந்தாராம்.

Shankar Ganesh

அப்போது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு வெள்ளிகிழமையில் புரொடக்சனில் சைவ சாப்பாட்டை தயார் செய்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை என்பதால் சைவ சாப்பாடு போடப்பட்டிருக்கிறது. மதிய உணவு இடைவேளையில் எம்.ஜி.ஆர் புரொடக்சன் சாப்பாட்டை பார்க்க வந்தாராம். அனைத்தும் சைவமாக இருப்பதை பார்த்த எம்.ஜி.ஆர், நாளை படப்பிடிப்பு வைத்துக்கொள்வோம் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் கணேஷ். அவரிடம் “என்ன ஆச்சு சேட்டா?” என்று கேட்டாராம். அதற்கு எம்.ஜி.ஆர், “நல்லா உழைக்குறவங்களுக்கு கறி, மீன் என்று சாப்பிட கொடுத்தால்தான் உற்சாகமாக இருக்கும். நீங்க என்ன சைவ சாப்பாட்டை கொடுக்குறீங்க?” என கேட்டாராம்.

MGR

அதற்கு கணேஷ், “வெள்ளிக்கிழமை என்பதால்தான் அப்படி சைவ சாப்பாடு தயார் செய்தோம்” என கூறியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர், “சில பேர்தான் வெள்ளிக்கிழமை சைவ சாப்பாடு சாப்பிடுவாங்க. ஆனால் நிறையா பேர் அசைவம் சாப்பிடுவாங்க. ஆதலால் அடுத்த முறை அசைவ சாப்பாட்டை தயார் செய்துவிடுங்கள்” என கூறினாராம்.

 

Arun Prasad
Published by
Arun Prasad