Categories: Cinema News latest news throwback stories

கடனை அடைத்து குடும்பத்தை மீட்ட எம்ஜிஆர்!..இன்று பல கோடிகளுக்கு சொந்தக்காரராக நிற்கும் ஐசரி கணேஷ்!..பின்னனி சம்பவம் இதோ!..

இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு தயாரிப்பாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். துள்ளுவதோ இளமை, 123, எங்கேயும் காதல் போன்ற படங்களில் நடிகராகவும் நடித்து இருக்கும் ஐசரி கணேஷ் பல ஹிட் படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக தேவி, போகன், மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார்.

இவரின் அப்பாவான ஐசரி வேலன் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது எம்.எல்.ஏ வாக இருந்தவர். ஒரு காலகட்டத்தில் ஐசரி வேலன் இறக்கும் தருவாயில் 2 லட்சத்துக்கும் மேலாக கடன் வைத்து விட்டு இறந்து போனாராம்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனை நம்பி “லவ் டூடே” படத்தை புறக்கணித்த சத்யராஜ்… ஆனா இப்போ என்ன ஆச்சுன்னா??

மேலும் நகை அடமானம், வெளியில் இருந்து பணம் வாங்கி கடன் போன்றவற்றால் வெளியில் இருந்து சில பிரச்சினைகளுக்கு ஆளானதால் ஐசர் வேலன் குடும்பம் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தந்தை மறைவிற்கு பிறகு உதவியை நாடி எம்ஜிஆரை அணுகியிருக்கிறார் ஐசரி வேலனின் துணைவியார்.

அவர் பெற்ற கடனை லிஸ்ட் போட்டு வாங்கி அது உண்மைதானா என விசாரிக்க ஒரு தாசில்தாரையும் நியமித்தாராம் எம்ஜிஆர். அவர் விசாரித்ததில் உண்மை நிலவரம் தெரியவர அந்த தாசில்தாரிடமே 3 லட்சம் தொகையை கொடுத்து கடனை அடைக்க சொல்லியிருக்கிறார். 2.70 லட்சம் ரூபாய் கடன் போக மீதி 30000 ரூபாயை எம்ஜிஆரிடம் கொடுக்க அதை எம்ஜிஆர் ஐசரி வேலனின் மனைவியிடம் கொடுத்து வாழ்க்கையை பார்த்துக் கொள் என்று கூறினாராம். அது தான் முதலில் ஐசரி கணேசனின் முதலீடு என இந்த தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர் கே. ராஜன் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini