Categories: Cinema News latest news throwback stories

எம்.ஜி.ஆர் தங்க பஸ்பம் சாப்பிடுவாரா?!.. இதற்கு அவரே சொன்ன பதில் இதுதான்!…

நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். துவக்கத்தில் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்கள்தான் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து மன்னர் கால படங்களில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த பக்கம் சிவாஜி கதையம்சம் கொண்ட படங்களில் உருகி உருகி நடித்தால், எம்.ஜி.ஆர் ஜனரஞ்சகமான கதைகளில் அலட்டிக்கொள்ளமால் நடித்து சூப்பர்ஸ்டாராக உருவானார்.

mgr photo

ஜெயலலிதா, லதா, மஞ்சுளா, சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி என பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர். திரைப்படங்களில் தன்னை தானே புரமோட் செய்து, தன்னை தானே புகழ் பாடி, மற்றவர்களையும் புகழ வைத்து தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் மாறினார். அதிமுக என்கிற கட்சியை துவங்கி தொடர்ந்து 15 வருடங்கள், அதாவது மூன்று முறை முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

எம்.ஜி.ஆர் என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது அவரின் தொப்பி, கருப்பு கண்ணாடி மற்றும் தங்கம் போல் ஜொலிஜொலிக்கும் அவரின் நிறம்தான். பொதுவாக எம்.ஜி.ஆர் பாலில் தங்கபஸ்பம் கலந்து சாப்பிடுவார் என்கிற கதை பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது, தங்க பஸ்பம் சாப்பிடுவதால்தான் எம்.ஜி.ஆரின் நிறம் தங்கம் போல் ஜொலிக்கிறது எனவும் சொல்வார்கள்.

ஒரு மேடையில் இதற்கு விளக்கமளித்த எம்.ஜி.ஆர் ‘பல பேருக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நான் தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவதால்தான் நிறமாகவும், உடல் திடமாகவும் இருப்பதான நினைக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. ஒரு குண்டூசி முனையில் தங்கத்தை தொட்டு பாலிலோ அல்லது நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள். அளவு அதிகமானால் உயிருக்கே ஆபத்தாக முடியும். உடலை பாதுகாப்பது மனதை பொறுத்தது. நமக்கு வயதாகிவிட்டதே என நினைக்காமல் ‘நமக்கு என்ன வயதாகிவிட்டது’ என நினைத்தால் வயோதிகம் நம்மை நெருங்காது. மற்றவர்கள்தான் என் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். நான் அதுபற்றி நினைப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: வெளில சொன்னா கேவலம்னு நினைச்சாரு!.. அந்த ஒரு மன உளைச்சல்.. விவேக் மரணத்திற்கான ரகசியம் இதுதான்..

Published by
சிவா