
Cinema News
நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
Published on
By
தமிழ் திரையுலகில் கண்ணதாசன் தனது பாடல் வரிகளால் கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்திலேயே அவருக்கு போட்டியாக பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கவிஞராகவும் இவர் மாறியிருந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார்.
எம்.ஜி.ஆருக்கு புகழை வாங்கி கொடுத்த ஏன் என்ற கேள்வி.. நான் ஆணையிட்டால்.. போன்ற பல பாடல்களை எழுதியது கவிஞர் வாலிதான். எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் வாலி பாடல்களை எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின் ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு வரை 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்களை எழுதி இறுதிவரை வாலிப கவிஞராகவே இருந்தார் வாலி.
இதையும் படிங்க: சந்தேகப்பட்டு கவிஞர் வாலி வைத்த டெஸ்ட்!… அசால்ட் பண்ணி டேக் ஆப் ஆன இசைஞானி!..
எம்.ஜி.ஆருக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல் பல தத்துவ மற்றும் சோக பாடல்களையும் வாலி எழுதினார். வாலி எழுதிய பல பாடல்களை ரசிகர்கள் கண்ணதாசன் எழுதியது என்றே நினைத்தார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல எம்.ஜி.ஆரே அப்படி நினைத்த ஒரு சம்பவத்தைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.
ஊடகம் ஒன்றில் பேசிய வாலி ‘நான் கற்பகம் படத்திற்கு 2 பாடல்களை எழுதியிருந்தேன். ‘இது சத்தியம்’ என்கிற படத்தில் கண்ணதாசன் எல்லா பாடலையும் எழுதியிருந்தார். ஒரு பாடல் மட்டும் பாக்கி இருந்தது. எனவே, எம்.எஸ்.வி என்னை பற்றி சொல்லி அவரை எழுத வைக்கலாம் என தயாரிப்பாளரிடம் சொன்னதோடு எனது பாடலையும் பாடி காட்டியுள்ளார்.
அதைக்கேட்ட தயாரிப்பாளர் ‘இவ்வளவு அழகாக எழுதுபவருக்கு ஒரு பாடலை மட்டும் எப்படி கொடுப்பது?. அடுத்து எம்.ஜி.ஆரை வைத்து படகோட்டி என்கிற படம் எடுக்கிறேன். அதில், எல்லா பாடலையும் வாலி எழுதட்டும்’ என சொல்லிவிட்டார். அப்படித்தான் படகோட்டி படத்திற்கு பாடல் எழுதினேன்.
இதையும் படிங்க: இதுக்குதான்யா புது டைரக்டருக்கு படம் பண்றது இல்ல! இயக்குனரால் கடுப்பான வாலி…
அந்த படத்தில் 2 பாடல்களை நான் எழுதும் வரை பாடல்களை எழுதியது நான்தான் என எம்.ஜி.ஆருக்கு தெரியாது. அப்போது கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே சுமூக உறவு இல்லை. பாடல்களை கேட்டுவிட்டு ‘கண்ணதாசன் எழுதினாரா?’ என அவர் கேட்க, தயாரிப்பாளர் என் பெயரை சொல்லியதும் ஆச்சர்யப்பட்டு பாடல்களை மீண்டும் கேட்டுள்ளார்.
அன்று மாலையே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் ‘இனிமேல் என் படத்திற்கு வாலிதான் பாடல்களை எழுதுவார்’ என அறிவித்தார்’ என வாலி அதில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சிகரெட் புகையை இசையமைப்பாளர் முகத்தில் ஊதிய வாலி!.. முதல் பாட்டு எழுதும்போதே இப்படியா?..
தெலுங்கு சினிமாவில் ஆர்யா, ஆர்யா 2, ரங்கஸ்தலம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தாலும் புஷ்பா திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில்...
Dude: லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்கள் கொடுத்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருப்பவர் பிரதீப்...
Karuppu: ரேடியோ தொகுப்பாளராக இருந்து சுந்தர்.சி கேட்டுக் கொண்டதால் அவர் இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சின்ன...
Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவரின்...
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...