Categories: Cinema News latest news

எம்.ஜி.ஆரிடம் கொள்ளையடிக்க வந்த ரசிகர்கள்.! தர்மஅடிக்கு பின்னர் என்ன நடந்த ‘அந்த’ சம்பவம்.?!

புரட்சி தலைவர் பொன்மன செம்மல் முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரை தெரியாதோர் இந்த தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். இவருக்கு திரைத்துறையில் தனி இடம் எப்போதும் உண்டு. தான் நடிக்கும் படங்கள் தன் படங்கள் கூறும் கருத்துக்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என பார்த்துக்கொள்பவர்.

இவர் அரசியலில் இறங்கிய பின்னர் எல்லாம் வெற்றிதான். இவரை பற்றி இன்னும் சில சர்ச்சைகளும் உண்டு. ஆம், அவர், யாராவது தன்னுடைய தோட்டத்திற்கு வருமாறு அழைத்தால் அந்த நபர் நடுங்கி விடுவார். எம்.ஜி.ஆருக்கு தவறு என பட்டுவிட்டால் முடித்துவிடுவார் என்ற செய்தியும் உலா வருவதுண்டு.

அவருடைய இந்த வீரம் பற்றி ஓர் சம்பவத்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கூறுகையில், ‘ ஒரு முறை எம்.ஜி.ஆர் ஓர் இரவில் காரில் வந்து கொண்டிருந்தார். அவர் காரில் எப்போதும் சிலம்பு கம்பு இருக்கும். அப்போது அவர் காரை ஒரு நான்கு பேர் மறுத்துவிட்டனர். அவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.

யாருடைய கார் என்று தெரியாமல் மறித்துவிட்டனர். பின்னர் அந்த காரில் இருந்து ஒரு பக்கமாக அவருடைய உளவியலாளர் இறங்க, மறுபுறம் எம்.ஜி.ஆர் இறங்குகிறார். உடனே , அந்த நால்வரில் ஒருவன் மட்டும் தீப்பெட்டி வெளிச்சத்தில் அந்தப்பக்கம் இறங்கியது யார் என பார்த்ததும் ஓர் அதிர்ச்சி. இவர் நம்ம வாத்தியார் போல இருக்கிறார் என கூற , எம்.ஜி.ஆர் உதவியாலாளர் அது எம்.ஜி.ஆர் தான் என கூற நால்வரும் அதிர்ந்துவிட்டனர்.

இதையும் படியுங்களேன் – என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.!

பின்னர், அவர்கள் நால்வருக்கும் எம்.ஜி.ஆர் கையால் அடி விழுந்தது. பின்னர், என் ரசிகர்களாக இருந்துகொண்டு இப்படி திருடுவீர்களா என கடிந்து என்ன என கேட்க, அவர்கள் தங்களுக்கு வேலை இல்லை என கூறவே, உடனே காரில் இருந்து ஆளுக்கு 1000 ரூபாய் கொடுத்து  இதனை வைத்து பிழைத்து கொள்ளுங்கள் இனி இந்த மாதிரி செய்ய கூடாது என அறிவுரை கூறி அனுப்பிவிட்டாராம். ‘ இதனை அந்த காவல் துறை அதிகாரி வரதராஜன் தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan