Categories: Cinema News latest news throwback stories

கால் உடைந்தும் படமெடுக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!.. என்ன படம் தெரியுமா?…

தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக கேரியரை துவங்கி திரைப்படங்களில் நுழைந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோவாக மாறியவர். வாள் சண்டை மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். எம்.ஜி.ஆர் படம் எனில் வாள் சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட சண்டை காட்சிகள் இருக்கும் என நம்பியே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். அதை புரிந்து கொண்டு எம்.ஜி.ஆரும் தான் நடிக்கும் படங்களில் அதிகமான சண்டை காட்சிகளை வைப்பார். துவக்கம் முதல் கடைசி வரை ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

mgr

எம்.ஜி.ஆர் ஒரு நாடகத்தில் நடித்து கொண்டிருந்த போது நடிகர் குண்டுமணியை தூக்கி கீழே போடுவது போன்ற காட்சியில் அவரின் கால் உடைந்து 6 மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி வீட்டில் இருக்கும்போது வெளிநாட்டு படங்களை பார்த்துள்ளார். அதில் ஆல்பர்ட் ஹிட்ச்காக் இயக்கிய Rare Window படமும் ஒன்று.

கதைப்படி அந்த படத்தின் ஹீரோ கால் உடைந்து வீட்டில் இருப்பார். அப்போது எதிரே உள்ள வீடுகளில் நடக்கும் விஷயங்களை கவனித்துக்கொண்டே இருப்பார். அப்போது ஒரு வீட்டில் கொலை நடக்கும். அதன்பின் என்னவானது என்பதுதான் அப்படத்தின் கதை. இதைப்பார்த்த எம்.ஜி.ஆருக்கு அவரின் அப்போதை நிலைக்கு அந்த கதை பொருத்தமாக இருந்ததாக உணர்ந்தார். அதுபோன்ற கதையில் நடிக்க ஆசைப்பட்டு ‘எதிர் வீட்டு ஜன்னல்’ என தலைப்பு வைத்து அப்படத்திற்கான கதையை எழுத சொன்னார்.

ஆனால், அவரின் வீட்டிலிருந்த பெரியவர்கள் ‘மருத்துவர் நடிக்க வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள். வீணாக உடம்பை கெடுத்து கொள்ள வேண்டாம்’ என அறிவுரை சொன்னதால் எம்.ஜி.ஆர் அந்த முயற்சியை கைவிட்டார்.

Published by
சிவா