×

பிரியங்காவால் பல்ப் வாங்கிய மியா... ஏன்மா உனக்கு இந்த அவசரம்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிரியங்கா சோப்ராவிடம் முன்னாள் ஆபாசப் பட நடிகை மியா காலிஃபா கேள்வியெழுப்பிய விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 
 
 

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் பற்றி நடிகையும் பாப் ஸ்டாருமான ரிஹானா டிவிட்டரில் பதிவிட அது சர்வதேச கவனம் பெற்றிருக்கிறது. அதன்பின்னர், சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், முன்னாள் ஆபாசப்பட நடிகை மியா காலிஃபா உள்ளிட்டோரும் அதற்கு ஆதரவுக் குரல் கொடுத்தனர். ஆனால், இந்தியப் பிரபலங்கள் போதிய ஆதரவு தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

இந்தநிலையில், பிரியங்கா சோப்ராவுக்கு மியா காலிஃபா கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் மியா காலிஃபா, `பிரியங்கா சோப்ரா எதாவது ஒரு இடத்தில் குரல் கொடுப்பாரா? நான் ஆர்வமாக இருக்கிறேன். பெய்ரூட் வெடிவிபத்தின்போது ஷகீரா செய்ததுதான் நினைவுக்கு வருகிறது. மௌனமாக இருப்பது..’ என்று சீண்டும் வகையில் பதிவிட்டிருக்கிறார். 


ஆனால், பிரியங்கா சோப்ரா இதுகுறித்து ஏற்கனவே குரல் கொடுத்துவிட்டார் என்பது மியாவுக்குத் தெரியவில்லை போலும். பாலிவுட் நடிகர் தில்ஜித் தோசாஞ்ச் பதிவுக்குப் பதில் கொடுத்திருந்த பிரியங்கா சோப்ரா, `விவசாயிகள் நமது உணவுக்கான போர்வீரர்கள். விவசாயிகளின் அச்சம் போக்கப்பட வேண்டும். அவர்களது கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். ஜனநாயக நாடு என்ற முறையில் இந்தப் பிரச்சனையை விரைவாகவும் எளிதாகவும் தீர்க்க வேண்டும்’’ என்று குரல் கொடுத்திருந்தார். அந்த ட்வீட்டின் ஸ்கீரின்ஷாட்களை பகிர்ந்த பிரியங்கா ரசிகர்கள் இந்த போராட்டம் தொடங்கிய சமயத்திலேயே அவர் குரல் கொடுத்து விட்டார். நீங்கள் தான் லேட் என எக்கசக்க கமெண்ட்களால் மியாவை கலாய்த்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News