மைக்கேல் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வாயடைத்துப் போன சினிமா உலகம்!
உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள மைக்கேல் என்ற படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாப் இசை மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். அவர் இறந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளார்கள். குறிப்பாக இந்தியாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு அவருக்கு. 80 மற்றும் 90-களில் பிறந்த பலருக்கும் மைக்கேல் ஜாக்சன் ஒரு மிகப்பெரிய கனவு நாயகன் இவர். இவரது ஸ்டைலை ஆரம்ப காலங்களில் பிரபுதேவா கூட பின்பற்றி வந்தார்.
இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு மைக்கேல் என்ர படம் வெளியாகியுள்ளது. மைக்கேல் ஜாக்சன் என்ற கருப்பின சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞன் எப்படி இந்த உலகையே தன் பாப் இசையால் கட்டி போட்டான் என்பதே படத்தின் கதை. மைக்கேல் ஜாக்சனின் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகனான ஜாஃபர் ஜாக்சன் நடித்துள்ளார். Antoine Fuqua என்ற இயக்குனர் இயக்கியுள்ள இந்த படம் உலகமெங்கும் சக்கை போடு போட்டு வருகிறது.
அவரது இறந்து ஆண்டுகள் கடந்தாலும் அவர் மீதான கிரேஸ் துளியும் குறையவில்லை என்பதை இந்த படத்தின் வசூல் நிரூபித்துள்ளது. வெளியாகி சில நாட்களிலேயே, உலகளவில் சுமார் 2100 கோடி ரூபாய்க்கும் மேல்வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
