×

பச்ச கலர் புடவையில் பால்வண்ண கிளி.... கொள்ளை அழகில் VJ சித்ரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

ரசிகர்களை திருதிப்படுத்த அவர்களது கோரிக்கையை ஏற்ற சித்ரா, பச்சை கலர் சேலையில் ஓர் பளிங்குச்சிலை போல் போஸ் கொடுத்து இணையவாசிகளையும் வசீகரித்து விட்டார். அழகு தேவதை மொட்டை மாடியில் நின்றிருப்பதுபோல் அனைவரது மனதிலும் ஆழமாக இறங்கிவிட்டார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் ரசிகர்கள் திக்குமுக்காடுகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News