×

காதலித்து ஏமாற்றிய நடிகர்.. நடிகை எடுத்த அதிரடி முடிவு

நான் நடிகர்கள் மட்டும் அல்ல திரையுலகை சேர்ந்த யாரையும் டேட் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
 
minissha_lamba_1624438677830_1624438694198

திரையுலகை சேர்ந்த யாரையும் காதலிக்க மாட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை minissha lamba தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா நடிகை பூஜா பேடியின் உறவினரான ரயன் தாமை இரண்டு ஆண்டுகள் காதலித்து 2015ம் ஆண்டில் திருணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர். ரயனை பிரிந்த பிறகு மினிஷா லம்பா வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கிறது. 

ஆனால் அந்த நபர் திரையுலகை சேர்ந்தவர் இல்லையாம். இந்நிலையில் காதல் பற்றி மினிஷா பேட்டி அளித்திருக்கிறார்.

நான் நடிகர்கள் மட்டும் அல்ல திரையுலகை சேர்ந்த யாரையும் டேட் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது. அவர்களை சுற்றி டெம்ப்டேஷன் இருந்து கொண்டே இருக்கும். 

நிறைய பேர் நடிகர்களை காதலித்து வருகிறார்கள். அதனால் யாரையும் காயப்படுத்தும் வகையில் நான் எதுவும் கூற விரும்பவில்லை. இது நான் எடுத்த முடிவு என்கிறார் மினிஷா லம்பா.

முன்னதாக நான் நடிகர் ஒருவரை காதலித்தேன். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து எனக்கு துரோகம் செய்தார். அவர் கடலை போடுவதில் வல்லவர் என்று மினிஷா தெரிவித்திருக்கிறார். அந்த நடிகர் ஏமாற்றியது தான் மினிஷா திரையுலகினரை டேட் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஆகும் என்கிறார்கள் ரசிகர்கள். மினிஷா தன் பர்சனலை பர்சனலாக வைத்திருக்க விரும்புகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News