‘அண்ணன் தம்பி விவகாரம்’ எனக்கூறியதை ஊடகங்கள் திரித்துவிட்டன - ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தமிழகம் திரும்பியுள்ளார். மேலும் அதிமுகவினர் ஒற்றுமையாக செயல்பட்டு திமுகவை எதிர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். எனவே, சசிகலா விரைவில் அதிமுகவோடு இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருபக்கம் ‘எங்களுக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனைதான்’ என அமைச்சர் வேலுமணி பேசியிருந்தார். எனவே, விரைவில் அதிமுக, அமமுக இணையும் என அரசியல் விமர்சகர்கள் கருதினர்.
ஆனால், இதுபற்றி சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கட்சியினரிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை விட்டு பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் அமைச்சர் வேலுமணி ‘அண்ணன் தம்பி’ எனக் கூறியதை ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டுவிட்டன. சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பது என்பது இந்த ஜென்மத்தில் நடக்காது. சசிகலாவும், தினகரனும் ‘ஒன்றிணைவோம் வா’ என திமுகவை அழைக்கின்றனர். எங்களை அல்ல. அவர்கள் இருவருக்கும் அதிமுகதான் பொது எதிரி. எங்களுக்கு பொது எதிரி திமுக’ என விளக்கம் அளித்தார்.