களத்திற்கே வராத தற்குறி.. விஜயை சகட்டுமானக்கி விமர்சனம் செய்த பிரபலம்

by Rohini |
vijay
X

vijay

நேற்று டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். அதனால் விகடன் குழுமம் சார்பாக அம்பேத்கர் பற்றிய ‘எல்லோருக்குமான தலைவர்’ என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டனர். அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விஜய் அழைக்கப்பட்டார். மேனாள் நீதிபதி சந்துரு, அவருடன் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் கலந்து கொண்டார்.விஜய் அவருடைய மா நாட்டிற்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது.

அதனால் இந்த விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க ஒட்டுமொத்த அரசியல் பிரபலங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் விஜய் எதற்கும் பயப்படாமல் ஒன்றிய அரசையும் மா நில அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருடைய பேச்சில் நிதானம், புத்திசாலித்தனம், பொறுமை இவற்றை பார்க்க முடிந்தது.

அதில் மாநில அரசை விமர்சித்து ‘இறுமாப்புடன் 200ஐ வெல்வோம்’ என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என திமுகவை சாடி பேசியிருந்தார்.

இவர் பேச்சுக்கு திமுக சார்பில் இருந்து அமைச்சர் சேகர் பாபு விஜயை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதில், 200 தொகுதி என்கிற எங்களின் நம்பிக்கை வீணாகும் என்றும் சில அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் ஆற்றிருக்கின்ற திராவிட மாடல் அரசின் சீர்பணிகளால் கருவறை முதல் கல்லறை வரை அனைவரும் பயன்பட்டு வருகின்றனர்.

இந்த நாடே சுபிட்சமாக இருக்கின்றது. தமிழகத்தின் அரசியல் தெரியாமல் இருக்கும் சிலருக்கு 2026 தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும். மீண்டும் முதல்வர் அவர்களை அரியணை ஏற்றுவோம். இது உறுதி என அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story