×

"அந்த நூலுக்கு பிரச்சனை என்றதும் இந்த நூல் குரல் குடுத்துச்சி" கமல் குறித்து மீரா மிதுன் சர்ச்சை.

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.

அண்மையில் மீரா மிதுன் நடிகை த்ரிஷாவை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டார் . அதில்,  இதுதான் பதிவு கடைசி எச்சரிக்கை திரிஷா...  அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை சந்திப்பீர்கள் என்று முட்டாள் தனமாக பதிவிட்டு அனைவரின் கிண்டலுக்கும் கோபத்திற்கும் ஆளாகினார்.

அதையடுத்து மீண்டும் திரிஷாவை குறித்து அபாண்டமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார் .  அதில், திரிஷா இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து இருக்க காரணம் அவரின் ஜாதி தான். த்ரிஷாவின் அப்பா ஒரு உயர் ஜாதியினர் என்பதால் தான் திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.  ஜாதி பாகுபாட்டினால் தான் நேபோட்டிசம் வருகிறது சர்ச்சை கிளப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது, நடிகை திரிஷா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டா அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளானார். அப்போது கமல் அவருக்கு ஆதரவு தெரிவித்து ட்விட் போட்டதை ஸ்க்ரீன் ஷாட்டுடன் வெளியிட்டு, " ஒரு நூலுக்கு பிரச்சினை என்றதும் இன்னொரு நூல் குரல் குடுத்தது. ஆனால், அதே நூல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என் பெண்மைக்கு பிரச்சினை என்ற போது போது குரல் கொடுக்காதது ஏன் ? நான் நூல் ஜாதி இல்லாததால் தானே என்று பதிவிட்டு சாதியை கிளறி வம்புக்கு இழுத்து வருகிறார் .

From around the web

Trending Videos

Tamilnadu News