அகில உலக சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரப்போறாரா!
நடிகர் மிர்ச்சி சிவா தமிழ் படம் 3 படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அரசியலுக்கு வருவது குறித்துப் பேசியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
அரசியலில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மிர்ச்சி சிவா, அரசியலுக்கு வர வேண்டும் என்றால் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் எனது வாழ்க்கை தற்போது மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருப்பதால் அரசியலுக்கு வரும் விருப்பம் இல்லை என்றும் மக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் மட்டுமே வழி கிடையாது என கூறியுள்ளார்.
மேலும்,இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகும் தமிழ் படம் 3 படப்பிடிப்பு நவம்பர் 5ஆம் தேதி தொடங்கியது. இப்படத்தில் மிர்ச்சி சிவாவுடன் நடிகை அதுல்யா ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
சமீபத்தி மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான சுமோ மற்றும் பறந்து போ ஆகிய திரைப்படங்களும் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில் தற்போது உருவாகி வரும் தமிழ் படம் 3 படமும் வெற்றியை கொடுக்குமா என்பதை காத்திருந்து பார்கலாம்.
