மகா விஷ்ணுவுக்கு கழுத்தை நீட்டிய கோப்ரா பட நடிகை!.. போடுங்க டா ”மாலை டம் டம்” பாட்டை!..
சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா படங்களில் நடித்த மிருணாளினி ரவி கிட்டத்தட்ட சினிமாவில் மார்க்கெட் இழந்த நிலையில், ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை திருமணம் செய்துக் கொண்டார்.
விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி படத்தில் இவர் நடனமாடிய ”மால டம் டம்” பாடல் ஏகப்பட்ட திருமணங்களில் ஒலித்து வரும் நிலையில், இப்போ அவருடைய திருமணத்திலேயே அது ஒலித்து விட்டது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகை மிருணாளினி ரவி ஆன்மிகச் சொற்பொழிவாளரான மகா விஷ்ணுவை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பின் கதாநாயகியாக சாம்பியன் படத்திலும் நடித்தார். அதை தொடர்ந்து எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

மலேசியாவில் நவம்பர் 15ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும், மிருணாளினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
