மகாவிஷ்ணுவுடன் திருமணத்துக்கு தயாரான மிருணாளினி ரவி!.. மெஹந்தி விழா களைகட்டுதே!..
நடிகை மிருணாளினி ரவி ரவியின் திருமண வைபவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மிருணாளினி ரவி ரவி சமூக வலைதளங்களில் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். பின்னர் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
#MirnaliniRavi enjoys a memorable bachelorette party with friends ahead of her wedding to #Mahavishnu. 💍✨ #WeddingCelebration #BacheloretteParty https://t.co/GX3yVeU4KP
— Chennai Times (@ChennaiTimesTOI) November 13, 2026
மிருணாளினி ரவி ரவி தனது ஏழு வருட காதலனான மகாவிஷ்ணு என்பவருடன் தனது நிச்சயதார்த்தம் நடைபெற்ற மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது மெஹந்தி, சங்கீத் பார்ட்டி என திருமணத்திற்கு தயாராகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
