Connect with us

Cinema News

குடிச்சிட்டு தாலியை கழட்டி எறிந்த மிருணாளினி ரவி!.. வீடியோவை பார்க்கும் போதே பகீர்னு ஆகுதே!..

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோமியோ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் போன்ற நெகட்டிவ் விமர்சகர்கள் சொன்ன பொய்யான விமர்சனங்களை நம்பி மக்கள் தனது படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை என விஜய் ஆண்டனி படத்தின் வசூலைப் பார்த்து புலம்பவே ஆரம்பித்துவிட்டார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போதே முதலிரவில் நாயகி மிருணாளினி ரவி சரக்கு அடிக்கும் காட்சியை வெளியிட்டு சம்மர் பிளாக் பஸ்டர் என தங்களுக்கு தாங்களே போஸ்டர் அடித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: பாலசந்தரிடம் ரஜினியை மாட்டி விட்ட நடிகை! அதுக்கு குடிக்கிற காப்பியில் இதையா கலக்குறது?

மேலும், பெண்கள் குடிப்பதை ஏன் ஊக்குவிக்கிறீங்க என்கிற கேள்விக்கு விஜய் ஆண்டனி ஜீசஸ் குடிக்கலையா என இயேசுவை வம்புக்கு இழுத்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியதற்கு கிறிஸ்தவ திருச்சபையின் கண்டனங்களை விதித்தனர்.

விஜய் ஆண்டனிக்கு நடிப்பே வரவில்லை என்றும் தேவையில்லாமல் இந்த படத்தில் எடிட்டராகவும் மாறி படத்தை சொதப்பி விட்டார் என விஜய் ஆண்டனியை விளாசித் தள்ளிவிட்டார் ப்ளூ சட்டை மாறன்.

இதையும் படிங்க: தேர்தல் முடிந்து அஜித் எங்கே போயிருக்காருன்னு பாருங்க!.. கழுத்துல மாலை வேற!.. அப்போ விடாமுயற்சி?

இந்நிலையில், அந்த படத்திலிருந்து வெளியான ஐயோ அம்மா பாடல் வீடியோவில் நடிகை மிருனாளினி ரவி சரக்கு அடித்துக் கொண்டு பார்ட்டி ஒன்றில் தனது கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி எறியும் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளார். லீலா ராக்ட்.. அறிவு ஷாக்ட் என கேப்ஷன் கொடுத்துள்ள மிருணாளினி ரவி போஸ்ட்க்கு கீழ் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சில சென்டிமெண்டுகள் உள்ளன. அதை எல்லாம் தாண்டி படம் எடுத்தால் இப்படித்தான் ஓடாமல் போகும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C6EZ-LCpEtr/

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top