×

’ராட்சசன்’ படத்தை பார்க்க மறுத்த மிஷ்கின்: ஏன் தெரியுமா?

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய ராட்சசன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு இணையாக வில்லன் கேரக்டரும் அமைந்திருந்ததால் இந்த படம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படம் ராட்சசன் படத்தின் காப்பி ஆக இருக்கும் என சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனை அடுத்து இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்த இயக்குனர் மிஸ்கின் ’இந்த படம் உருவாகி கொண்டிருக்கும் போதே உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் ராட்சஸன் படத்தை பார்க்குமாறு கூறினார். ஆனால் நான் அந்த படத்தை பார்க்க மறுத்து விட்டேன். ஏனெனில் எனக்கு நன்றாக தெரியும் இந்த படத்தின் கதை இதற்கு முன்னர் வேறு எந்த படத்திலும் வந்திருக்காது என்று. எனவேதான் அந்த படத்தை நான் பார்க்க மறுத்தேன்.

அதன் பின்னர் சைக்கோ படத்தை உதயநிதி ஸ்டாலின் பார்த்து, ராட்சசன் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரு காட்சி கூட சம்பந்தம் இல்லை என்று கூறியதை அடுத்து என் மீது எனக்கு நம்பிக்கை வந்தது என்று கூறினார். எனவே சைகோ படம் ராட்சஸன் படத்தின் காப்பி இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News