×

பாவம் ஆண்ட்ரியா.. ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.... முக்கிய பிரபலம்!!!

மிஷ்கின் இயக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,
 
andrea-jeremiah_151547532100

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிசாசு, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 

மேலும் மிஷ்கின் இயக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அவருடன் நடிகை பூர்ணா நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து மிஷ்கின் கூறியதாவது : "பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதுபோல இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மேலும் இரண்டு படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை. 

ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நான் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம்.

இது பெரியவர்களுக்கான திகில் படம்தான், படம் பயமுறுத்தத்தான் செய்யும் என்கிறார் மிஷ்கின்.

From around the web

Trending Videos

Tamilnadu News