×

சினிமா வாய்ப்புக் கிடைச்சா.... `மிஸ் இந்தியா 2021’ மானசாவின் `நச்’ பதில்

ஃபெமினா மிஸ் இந்தியா 2021 பட்டம் வென்ற தெலங்கானா மாடல் மானசா வாரணாசிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 

மிஸ் இந்தியா 2021 பட்டம் வென்ற மானசா, நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக ஹைதராபாத் திரும்பினார். இந்தத் தகவலறிந்து விமான நிலையத்தில் ஊடகங்களும் பொதுமக்களும் குவிந்தனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் மிகப்பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இதனால் நெகிழ்ந்துபோன மானசா, ஊடகங்களிடம் பேசினார். `எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வளவு பேர் ஆதரவு கிடைக்க உண்மையிலேயே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சொந்த ஊருக்குத் திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி. ஹைதராபாத்தில் இரண்டு வாரங்கள் இருக்கப் போகிறேன்’ என்றார். 


மிஸ் வேர்ல்டு கனவு பற்றி பேசிய அவர், `மிஸ் வேர்ல்டு மிகப்பெரிய போட்டி. அது இதை விடக் கடினமானது. இந்த ஆண்டின் இறுதியில்தான் அது நடக்க இருக்கிறது. அதற்குத் தயாராக எனக்குப் போதுமான நேரம் கிடைத்திருக்கிறது. அதுபோன்ற மிகப்பெரிய போட்டிகளில் இந்தியாவுக்காகப் பங்கேற்பது மிகப்பெரிய கௌரவம்’’ என்றார்.


சினிமா வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் பரிசீலிப்பேன் என்று கூறிய மானசா, தற்போதைய நிலையில் மிஸ் வேர்ல்டு போட்டியிலேயே தனது கவனம் முழுவதும் இருப்பதாகத் தெரிவித்தார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News