×

இந்த Show'க்கு செலவான பணத்தை அவருக்கு கொடுத்திருந்தால் உயிரோட இருந்திருப்பாரு!

வடிவேல் பாலாஜிக்காக கலங்கிய விஜய் டிவி பிரபலங்கள்

 

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து விஜய் டிவியின் எல்லா நகைச்சுவை ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் கடந்த 6 மாதமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாமல் வருமானம் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது மறைவை ஒட்டி அவரது உடலுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அவருடன் பணிபுரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி வடிவேல் பாலாஜிக்கு கண்ணீர் விட்டு மரியாதை செலுத்தினர். இதை "மிஸ் யூ பாலாஜி" என ஒரு நிகழ்ச்சியாகவே ஒளிபரப்புகின்றனர். இந்த பணத்தை அவரது மருத்துவ செலவிற்கு கொடுத்து உதவி இருந்தால் இந்நேரம் அவர் உயிரோடு இருந்திருப்பார்.

From around the web

Trending Videos

Tamilnadu News