×

முருகன் வேடத்தில் ஒன்று மட்டும் மிஸ்ஸிங் – யோகிபாபு போஸ்டரால் சர்ச்சை !

யோகிபாபு நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படமான காக்டெய்ல் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

 

யோகிபாபு நடிப்பில் புதிதாக உருவாகி வரும் படமான காக்டெய்ல் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவின் தற்போதைய காமடி கிங் யாரென்றால் அது யோகி பாபுதான். ஆனால் காமெடியனாக மட்டும் நடிக்காமல் அவ்வப்போது காமடி ஹீரோவாகவும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில் காக்டெய்ல் என்ற படத்தில் அவர் நடிக்க அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. அதில் அவர் முருகன் வேடத்தில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இந்த போஸ்டர் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கடவுள் முருகனை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இது சம்மந்தமாக இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பிக் கண்டனங்களை தெரிவித்து இருந்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. யோகிபாபு முருகன் வேடம் தரித்திருக்க ஆனால் அவர் பூனூல் அணிந்திருக்கவில்லை. வழக்கமாக முருகனின் படங்களில் எல்லாம் பூனூல் இருக்கும் என்பதால் இது வேண்டுமென்றே முருகனுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என்று வேறு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எப்படியோ படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்து வருகிறது என்பது மட்டும் உண்மை.

From around the web

Trending Videos

Tamilnadu News