×

சேவ் சக்தியை தொடங்கி வைத்த உதயநிதி... வரலட்சுமி டவீட்.. குவியும் பாராட்டுக்கள்!

பிரச்சனை காலத்தில் மக்களுக்கு உதவி செய்ய தன் அமைப்பின் மூலம் கோவிட் ஹெல்ப்லைனை உருவாக்கியுள்ளார் வரலட்சுமி.
 
Varu

படங்களில் நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று இல்லாமல் #saveshakthi என்கிற அமைப்பை துவங்கி பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை காலத்தில் மக்களுக்கு உதவி செய்ய தன் அமைப்பின் மூலம் கோவிட் ஹெல்ப்லைனை உருவாக்கியுள்ளார் வரலட்சுமி.

அந்த கோவிட் ஹெல்ப்லைனை சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார். தன் அம்மா சாயாவுடன் சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் வரலட்சுமி. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வரலட்சுமி கூறியிருப்பதாவது,

எங்களின் #saveshakthi அமைப்பினரை சந்தித்து, கோவிட் ஹெல்ப்லைனை துவங்கி வைத்து, தெரு நாய்களுக்கு நாங்கள் அளித்த 2 டன் உணவை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி உதயநிதி ஸ்டாலின். தயவு செய்து எங்களின் கோவிட் ஹெல்ப்லைனை பயன்படுத்துங்கள். எங்களால் முடிந்த உதவியை செய்வோம் என தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் ஹெல்ப்லைன் விபரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

வரலட்சுமியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வரலட்சுமி ஒரு புது நாய்க்குட்டி வாங்கியிருக்கிறார். அதற்கு குச்சி வரலட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News