×

தமிழகத்தில் வேலையின்மை புள்ளி விபரம் 0.5 சதவீதம் மட்டுமே! - பொய்யான தகவலை தரும் திமுக

 

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களுக்கு பயனுள்ள வகையில் பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார். ஆனால், எதிர்கட்சியான திமுக தொடர்ந்து ஆளும் அரசை எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகிறார். 

குறிப்பாக தமிழகத்தில் வேலையின்மை புள்ளிவிபரம் 49.8 சதவீதமாக இருப்பதாக சமீபத்தில் மு.க.ஸ்டாலின் குறை கூறியிருந்தார். ஆனால், அது வெறும் 0.5 சதவீதம் மட்டுமே என புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளது.

டைம்ஸ் ஆம் இந்தியா நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வேலையின்மை புள்ளிவருடம் 5 வருடங்களில் இந்த டிசம்பர் மாதம் 0.5 சதவீதம் என அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் (CMIE) அளித்துள்ள தகவல்படி, தேசிய அளவில், இந்த விகிதம் ஒரு மாதத்திற்கு முன்பு 6.5 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 9.1 சதவீதமாக உயர்ந்தது. பெரிய உற்பத்தி நடைபெறும் குஜராத்தின் வேலையின்மை விகிதம் 3.9% இலிருந்து 3% ஆகவும், மகாராஷ்டிராவின் விகிதம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 3.1% இலிருந்து 3.9% ஆகவும் உயர்ந்தது. 

ஏப்ரல் மாதத்தில் தமிழகம்  ஊரடங்கில் முடங்கிய நிலையில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 49.8% ஆக இருந்தது, இது படிப்படியாக குறைந்து ஜூலை மாதத்தில் 8.1% ஆக குறைந்தது. இது செப்டம்பரில் 5% ஆக இருந்தது, அக்டோபரில் மேலும் 2.2% எனவும், நவம்பரில் 1.1 சதவீதமாகவும், டிசம்பரில் 0.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது என CMIE கூறியுள்ளது. தொற்றுநோய் இருந்தபோதிலும், 2020 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நிகர ஊதியம் ரூ.2,75,937 ஆக இருந்தது என வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஏப்ரல் மாதத்தில் இருந்த வேலைவாய்ப்பின்மை சதவீதத்தை தற்போது ஸ்டாலின் கூறி வருவது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News