×

அதிரடியாக களம் இறங்கிய முதல்வர் ; திட்டத்தை மாற்றிய திமுக : ஆனாலும் பழைய ரூட்டுதான்!...

 

தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த சனிக்கிழமை தனது பிரச்சாரத்தை சேலத்தில் துவங்கினார். மேலும், பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதைக்கண்டு அதிர்ந்து போன திமுக தனது பிரச்சாரத்தை முன் கூட்டியே துவங்கியுள்ளது.

எனவே, புது வியூகத்தை வகுத்து கொடுக்கும் படி பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திடம் ஐடியா கேட்க, 2019ம் ஆண்டு திமுக பயன்படுத்திய அதே யுக்தியை பயன்படுத்த சொல்லியுள்ளதாம்.  அதாவது, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கிராம சபை கூட்டங்கள் மற்றும் குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. எனவே, அதையே 2021 சட்டமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்த உள்ளார்களாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை ஜனவரி 2வது வாரத்தில் துவங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை துவங்கிவிட்டதால் டிசம்பர் 23ம் தேதியே திமுக கிராம சபை கூட்டங்கள் பெயரில் பிரச்சாரத்தை துவங்கவுள்ளது. மேலும், 16 ஆயிரம் கிராமங்களுக்கு ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். இது திமுகவின் பயத்தை காட்டுகிறது.

இப்படி அவசர கதியாக திமுக தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளதால், புது யுக்திகள் ஏதுமின்றி நாடாளுமன்ற தேர்தலில் கடைபிடித்த பழைய பிரச்சாரத்தையே கையில் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News