அதனால தான் அது ’மொத ராத்திரி’!.. சிரிப்பலையில் ஒரு சீரியஸ் ஃபர்ஸ்ட் நைட்!..
ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வழக்கமான காதல் அல்லது குடும்பக் கதையாக இல்லாமல், இரவில் அடுத்தடுத்து நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் கதைக்களத்தைக் கொண்டுள்ளது. திருமணக் கொண்டாட்டமாகத் தொடங்கி அந்த இரவு குழப்பம் மற்றும் பல திருப்பங்களுக்குள் செல்கிறது என்பதே படத்தின் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.
#ModhaRathri Trailer 👌🏻
— Ayyappan (@Ayyappan_1504) August 13, 2026
It’s a story about what happens after two people who don’t like each other get married 🫣 pic.twitter.com/dVRFLc5dgB
மேலும், இப்படத்தில் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில் ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’ திரைப்படமும் வெளியாக இருப்பதால், இரு படங்களுக்கும் இடையே திரையரங்கு போட்டி உருவாகியுள்ளது.
இதனால் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், திருமண இரவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.