மொத ராத்திரி படத்தில செகண்ட் ஹீரோவா இருந்த கார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் லவ் லாக்!

 
love

மொத ராத்ரி திரைப்படம், கனா கானும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் வெப் தொடரில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் டிகே கார்த்திகேயன் தற்போது ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படமான லவ் லாக் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ள நிலையில், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

love

இயக்குநர் எட்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள லவ் லாக் படத்தில் டிகே கார்த்திகேயன், லாவன்யா, கௌசல்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும்,லவ் லாக் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளதால், படத்தின் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

lock

துணை நடிகராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய டிகே கார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் நிலையில், இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

CR  Desk
CR Desk

7927 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web