drishyam 3 : நாளை வெளியாகும் திரிஷ்யம் 3 டிரைலர்
மலையாள திரையுலகின் எவர்கிரீன் ஆக்டர் மோகன்லால் நடித்து அடுத்து வெளியாக் உள்ள படம் திரிஷ்யம் 3. இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எத்ரிபார்ப்பு அதிகரித்துள்ளது.
திரிஷ்யம் 1 மற்றும் 2ல் ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த கொலையிலிருந்து தப்பித்துவிட்டாலும், சட்டம் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மூன்றாவது பாகம் தான் திரிஷ்யம் கதையின் இறுதி முடிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜார்ஜ்குட்டியின் புத்திசாலித்தனத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் இந்த பாகத்தில் உடைக்கப்படுமா அல்லது மீண்டும் அவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பாரா என்பதே கதையின் மையக்கருவாக இருக்கும் எனத் தெரிகிறது.
முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியால் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு) மற்றும் சீனம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது உருவாகியுள்ள மூன்றாவது பாகம், முந்தைய இரண்டு பாகங்களை விடவும் அதிக சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களைக் கொண்டிருக்கும் என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாக் உள்ளது. நாளை வெளியாகும் டிரைலரில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
